கல்பனா சாவ்லா விருது பெற்ற தாமோதரன் மனைவி ராஜலட்சுமி, அவரின் மகள் சிவரஞ்சனி ஆகியோருக்கு விஜய் மக்கள் இயக்கம் (INTERNRET FORUM) சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
சென்னை: இந்தாண்டிற்கான, "கல்பனா சாவ்லா' விருது, திருடர்களுடன் போராடி, அவர்களை போலீசில் பிடித்துக் கொடுத்த, கடலூரைச் சேர்ந்த ராஜலட்சுமி மற்றும் மகள் சிவரஞ்சனிக்கு வழங்கப்பட்டது.
சுதந்திர தினத்தையொட்டி, ஆண்டு தோறும் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு, "கல்பனா சாவ்லா' விருது வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை: இந்தாண்டிற்கான, "கல்பனா சாவ்லா' விருது, திருடர்களுடன் போராடி, அவர்களை போலீசில் பிடித்துக் கொடுத்த, கடலூரைச் சேர்ந்த ராஜலட்சுமி மற்றும் மகள் சிவரஞ்சனிக்கு வழங்கப்பட்டது.
சுதந்திர தினத்தையொட்டி, ஆண்டு தோறும் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு, "கல்பனா சாவ்லா' விருது வழங்கப்பட்டு வருகிறது.
கல்பனா சாவ்லா விருது: இந்தாண்டிற்கான, "கல்பனா சாவ்லா விருதை' கடலூர் மாவட்டம், பூவுடையூர் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் மனைவி ராஜலட்சுமி, அவரின் மகள் சிவரஞ்சனி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருதுடன், பதக்கம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசையும் முதல்வர் வழங்கினார். கடலூர், பூவுடையூர் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன், மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த பிப்., 28ம் தேதி, ராஜலட்சுமியும், முதல் மகள் ஜெயப்பிரியாவும், இரண்டாவது மகளான, பிளஸ் 2 படித்த சிவரஞ்சனியும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, வீட்டிற்குள் புகுந்த இரண்டு திருடர்கள், அவர்களிடம், 10 ஆயிரம் ரூபாய் பணம், ஏழரை சவரன் நகையை பறித்தனர். தப்ப முயற்சிக்கும் போது, ராஜலட்சுமியும், சிவரஞ்சனியும் சேர்ந்து திருடர்களிடம் இருந்து நகையை பறிக்க முயன்று, தாக்குதல்களுக்கு உள்ளாகினர். இறுதியில், திருடர்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, திருடர்கள், மணல்மேடு முருகன், திருவளப்பாடி அருள் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்தே, தற்போது முதல்வர் கையால் கல்பனா சாவ்லா விருதை ராஜலட்சுமியும், சிவரஞ்சனியும் பெற்றுள்ளனர்.
"பெருமையாக உள்ளது': இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ""எங்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளது பெருமையாக உள்ளது. விருது குறித்து நேற்று முன்தினம் தான், எங்களுக்கு தகவல் கிடைத்தது,'' என்றனர். பிளஸ் 2 முடித்துள்ள சிவரஞ்சனி, பண்ருட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார். தற்போது, முதல்வர் அளித்துள்ள ஐந்து லட்சம் ரூபாய் நிதியை, அவரது படிப்பிற்காக பயன்படுத்த உள்ளதாகவும், தகப்பனார், தாமோதரன் தெரிவித்தார்.
நன்றி ;தினமலர்
No comments:
Post a Comment