குப்பம்: ஆந்திராவிலுள்ள திராவிடியன் பல்கலைக்கழகம், தான் வழங்கும் ரெகுலர் எம்.ஏ, எம்.பில் மற்றும் பி.எச்டி படிப்புகளுக்கு, தமிழகம் மற்றும் கர்நாடகாவிலிருந்து அதிகளவு மாணவர்களை சேர்க்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இப்பல்கலையில், Off - campus முறையில் பி.எச்டி படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவின், சித்தூர் மாவட்டத்தில், குப்பம் என்ற இடத்திலுள்ள இப்பல்கலையின் தமிழ் துறையில், கற்பித்தலை மேம்படுத்த, மேலும் 4 ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை, இத்துறையின் உள்கட்டமைப்புகளுக்காக, 2 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழ் துறையில், எம்.ஏ, எம்.பில் மற்றும் பி.எச்டி படிப்புகளில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு, சிறப்பு உதவித்தொகை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ரெகுலர் மாணவர்களுக்கான, உணவு மற்றும் தங்குமிட செலவினங்கள் இவற்றுள் அடங்கும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாயுள்ள BC/MBC/SC/ST பிரிவு மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதைப்பற்றி முழு விபரம் அறிய www.dravidianuniversity.ac.in என்ற இணையதளம் செல்க அல்லது kduvivekago@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புக

