10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, இளங்கலை, முதுகலை படிப்பை முடித்துவிட்டு, மேற்படிப்பிற்காக மாணவ,- மாணவிகள் சென்னையை நோக்கி வருவது தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் இடம் கிடைக்கவே சிரமாக இருக்கும் சூழலில் எப்படி இவர்கள் சென்னையில் தங்கி படிக்கபோகப்போகிறார்கள் என்பது மற்றொரு பிரச்சனையாக உள்ளது.
ஏன் எனில் சென்னையில் அரசு விடுதிகள் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பம் போடக்கூடிய மாணவர்களில் 50 சதமானோருக்கு மட்டுமே விடுதிகள் கிடைக்கின்றன. மற்றவர்கள் விடுதிகளில் கெஸ்டுகளாகவும், சென்னை மாநகரில் அதிக கட்டணத்தில் வீடுகளில் வாடகைக்கும் தான் இருக்கிறார்கள். தனியார் விடுதிகளை அனுகினால் அங்கே கட்டணம் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
சென்னையில் மொத்தம் 24 அரசு விடுதிகள் உள்ளன. பிற்ப்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்த கல்லூரி மாணவர்களுக்காக வடபழனி திருநகர், மைலாப்பூர், துரைப்பாக்கம் ஆகிய 3 இடங்களிலும், கல்லூரி மாணவிகளுக்கு அஜிஸ் நகர், கோடம்பாக்கத்திலும், பள்ளி மாணவிகளுக்கு திருவான்மியூரில் ஒரு விடுதியும் இருக்கின்றன.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு பெரியார் பாதை (வடபழனி திருநகர்), ஓட்டேரி ஆகிய 2 இடங்களிலும் விடுதிகள் உள்ளன.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பை சார்ந்த இளங்கலை மாணவர்களுக்கு எம்.சி.ராஜா (சைதாப்பேட்டை), எம்.சி.ராஜா இணைப்பு (சைதை), நந்தனம், கோடம்பாக்கம், பெரம்பூர் இணைப்பு வில்லிவாக்கம், வில்லிவாக்கம் ஆகிய 6 விடுதிகளும் உள்ளன. கல்லூரி மாணவிகளுக்காக இராயபுரத்தில் ஒரு விடுதியும் உள்ளது. முதுகலை ஞழு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சூர்ய நாராயணன் செட்டி தெரு இராயபுரத்தில் ஒரு விடுதியும், மாணவிகளுக்கு , சிமென்டரி ரோடு, இராயபுரத்தில்ஒரு விடுதிகளும் உள்ளன.
அதைப் போல ITI படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வில்லிவாக்கத்தில் ஒரே முகவரியில் 2 விடுதிகள் உள்ளன. ITI மாணவிகளுக்கு இராயபுரத்தில் ஒரு விடுதியும் உள்ளது.
பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இராயபுரத்தில் 2 விடுதிகள் உள்ளது. பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு இராயபுரம், வில்லிவாக்கம் உட்பட மொத்தம் 3 விடுதிகள் உள்ளன. இதில் முக்கியமானதென்ன வென்றால் அரசு நிர்ணயித்த இடங்களை காட்டிலும் கூடுதலாகத்தான் இந்த விடுதிகளில் மாணவர்களை அரசு நிர்ணயிக்கிறது. மேலும் கெஸ்ட்டுக்களும் தங்கி வருகின்றனர்.

No comments:
Post a Comment