சென்னை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வெழுத, ஏற்கனவே விண்ணப்பம் செய்யாத மாணவர்கள், தட்கல் திட்டத்தின் கீழ், செப்டம்பர் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வுத்துறை அறிவிப்பு: எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் ஆகிய 4 வகை தனித்தேர்வர்களும், செப்டம்பர் 14ம் தேதி முதல், 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் வழங்கப்படும். தேர்வுக் கட்டணம் 125 ரூபாய், சிறப்புக் கட்டணம் 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஏற்கனவே தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தேர்வர்கள், தற்போது சிறப்புக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தபட்ட மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அங்கேயே சரிபார்க்கப்பட்டு, தகுதியான மாணவர்களுக்கு உடனடியாக, &'ஹால் டிக்கெட்&' வழங்கப்படும்.
இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment