டெல்லியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரயில், இன்று அதிகாலை நெல்லூரை கடந்து வந்து கொண்டிருந்த போது, தீ விபத்துக்கு உள்ளானது. இதில் 47 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை இரவு 10 .30 மணிக்கு புறப்பட்ட குறித்த ரயில், நெல்லூர்ர் ரயில் நிலையத்தைக் கடந்த சிறிது நேரத்தில் தீ பிடித்ததிருக்கிறது. விபத்துக்குள்ளான எஸ் 11 பெட்டியில் (2ம் வகுப்பு) 72 பேர் பயணம் செய்தார்கள் என்றும் தெரிகிறது. தீ விபத்து நேரிட்டது அதிகாலை நேரம் என்பதால், அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்த போதுதான் அலறல் சத்தம் கேட்டு, பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.
அனாலும், கதவை நன்றாகத் தாழிட்டுக் கொண்டு பயணிகள் உறங்கியபடியால், அலறல் சத்தம் கேட்டும் பயணிகளைக் காப்பாற்ற முடியாமல் போனதாக தீ விபத்தை நேரில் பார்த்தவர் கூறியிருக்கிறார். தாம் எவ்வளவோ முயற்சி செய்தும், பெட்டியின் இரு கதவையும் திறக்க முடியவில்லை. அவை ஜாம் ஆகிவிட்டன என விபத்தில் காயமடைந்த சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிலர் ஜன்னல்களை உடைத்து வெளியில் பாய்வதற்கு முற்பட்டுள்ளனர். அதற்குள் பெட்டி முழுவதும் தீ பரவிவிட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீ அணைப்பு வீர்கள் கடும் போராட்டத்தின் பின்னர் காலை 6 மணிக்குள் தீயை அனைத்து விட்டதாகத் தெரிகிறது. மீட்கப்பட்ட சடலங்கள் அடையாளம் காண முடியாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் நெல்லூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து சென்னையிலிருந்து சிறப்பு ரயில் ஒன்று நெல்லூர் புறப்பட்டு சென்றிருக்கிறது. இந்த சிறப்பு ரயிலில் உயிர்காக்கும் மருந்துகளும், தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பயணம் செய்தவர்களின் உறவினர்களும் செல்கின்றனர். தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரயிலின் தீ விபத்து ஏற்பட்ட எஸ் 11 பெட்டியில் 22 க்கும் மேற்பட்ட சென்னைவாசிகள் பயணம் செய்ததாகவும் தெரிகிறது.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அதிக காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் தரப்படும் என்று, ரயில்வே துறையின் முக்கிய அதிகாரி அனில் சக்சேனா மற்றும் ரயில்வே துறை அமைச்சர் முகுல்ராய் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்த தீவிபத்து பற்றி தெரிந்து கொள்ள, டெல்லி, குண்டூர், விஜயவாடா, சென்னை ஆகிய நகரங்களிலிருந்து சிறப்பு தொலைபேசி வசதிகள் செய்யப் பட்டிருப்பதாகவும், நெல்லூர் ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இந்த தீவிபத்துக்கு காரணமாக இருந்த விஷயம் எது என்கிற அடுத்த கட்ட விசாரணை நடந்து வருவதாகத் தெரிகிறது.

ரயிலில் பலியானோர் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் சென்னை செண்டரிலில் காத்துள்ளனர்.
காயம் அடைந்த பயணிகள் விவரம் மற்றும் மருத்துவமனைகள் விபரம் : தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவனை மற்றும் அவர்களுடைய பெயர் விவரம்:

நெல்லூர் ஜெயபாரதி மருத்துவமனை: சரளா, ரன்சர்லால், உதய பாஸ்கர், ஸ்ரீனிவாசலு, பிரகாஷ் சிங், சேபா சிங்,
பொல்லியன்ட் மருத்துவமனை: மதன்லால், ஹரிகிருஷ்ணன், அனுஷ்கா, திருபாத்தம்மன், சம்பத்குமார், பாலி கிளினிக்: விஜயகுமார் குருஷி.
நெல்லூர் அரசு மருத்துவமனை: ரேகா, வீனா, சம்பா சிவராஜ், வர்மா சிரிஷ், வெங்கட கோட்டீஸ்வர ராவ், வர்மா, குகைன், ராகவன், சுனில்குமார், ஹர்ஷித், சந்தீப் அத்ரிகோத்ரி, அமீர் பிரீத்சிங்.
ஹெல்ப் லைன் எண்கள் : நெல்லூர் ரயில் விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வதற்காக ரயில்வே ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது. அதன் விவரம்:
சென்னை சென்ட்ரல்: 044-25357398, 25330821.
நெல்லூர்: 0861-2345863, 864, 865, 866, 0866-2576924, 2575034.
செகந்திராபாத்: 040-27786723, 27700868, 27786539.
வாரங்கல்: 0870-2426232, 097013 71063.
புதுடெல்லி: 011-23342954, 23341072, 23341074.
டெல்லி நிஜாமுதீன்: 011-24359748.
நெல்லூருக்கு சிறப்பு ரயில் : தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் தீப்பற்றிய எஸ்.11 பெட்டி கழற்றி விடப்பட்டு சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 11.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என கூறப்பட்டது. மேலும், தீயில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க, அவர்களது உறவினர்களை இலவசமாக அழைத்து செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், மருத்துவ குழுவினர், மருந்துகள், ஆடைகள், குடிநீர், உணவு போன்றவற்றுடன் காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றது.

No comments:
Post a Comment