ஜப்பானின் யமடாகே ஹனிவெல் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் லிமிடெட், பாலக்காடு என்ற ஐ.எல்.பி., நிறுவனம் இத்துறையில் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்தின் பாலக்காட்டில் உள்ள உற்பத்திப் பிரிவில் பணியாற்ற மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவியில் டெக்னிகல் மற்றும் நிதிப்பிரிவுகளின் கீழ் பணியமர்த்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவை என்னென்ன: ஐ.எல்.பி., நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.09.2011 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தொழில் நுட்ப பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் மெக்கானிகல் இன்ஜினியரிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும். எம்.இ., எம்.டெக்., போன்ற படிப்பை இதே பிரிவில் முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. நிதிப் பிரிவுக்கு விண்ணப்பிக்க ஏ.சி.ஏ., அல்லது ஏ.ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பிற விபரங்கள்: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒரு வருட காலத்திற்கு பயிற்சி அடிப்படையில் பணியாற்ற வேண்டியிருக்கும். இதே போல் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் 4 வருட காலம் அல்லது ரூபாய் ஒரு லட்ச ரூபாய்க்கான பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பத்தைப் பின்வரும் முகவரியிலிருந்து பெறலாம். இதன் பின்னர் ரூ.100/-க்கான தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து பெறப்பட்ட டி.டி.,யை Instrumentation Limited என்ற பெயரில் பாலக்காட்டில் மாற்றத்தக்கதாக எடுத்து, முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment