கேரளாவின் திருச்சூரை மையமாகக் கொண்டு இந்திய சுதேசி இயக்க காலம் முதல் செயல்பட்டு வரும் சவுத் இந்தியன் வங்கி ஒரு ஷெட்யூல்டு வங்கியாகும். இந்த வங்கியின் மும்பை மண்டலத்தில் 25 புரொபேஷனரி கிளர்க் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்:சவுத் இந்தியன் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க 31.05.2011 அன்று 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அறிவியல் புலத்தில் பட்டம் பெற்றவர்கள் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடனும், கலைப் புலத்தில் பட்டம் பெற்றவர்கள் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ. 250/க்கான டி.டி.,யை South Indian Bank என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
இதர தகவல்கள்:பரிந்துரைக்கப்பட்ட மாதிரியில் நிரப்பப்பட்ட படிவத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, டி.டி., சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றை இணைத்து பின் வரும் முகவரிக்கு 30.09.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி:Depurty General Manager,
The South Indian Bank Ltd.,
Regional Office,
Mumbai, "SIB HOUSE",
No.266 Linking Road,
Bandra (W), Mumbai - 400 050. Maharastra.
The South Indian Bank Ltd.,
Regional Office,
Mumbai, "SIB HOUSE",
No.266 Linking Road,
Bandra (W), Mumbai - 400 050. Maharastra.
No comments:
Post a Comment