Thursday, 15 September 2011

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்


பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான தனித் தேர்வு செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்த தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் அனுமதிச் சீட்டைப் பெற்றதும் அதில் அச்சிடப்பட்ட விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால், அனுமதிச் சான்றிதழைப் பெற்றவுடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் கூடுதல் செயலாளரை நேரிலேபா, தபால் மூலமோ தொடர்பு கொள்ள வேண்டும்.
எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுகளைச் செய்ய வேண்டும்.
தனித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதும் முதல் நாளன்று தமது முகவரியுடன் கூடிய ரூ.30க்கான அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட பெரிய அளவு அஞ்சல் உறையைத் தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
source :www.kalvimalar.com

No comments:

Post a Comment